home|information|documents|news|programs|resources|contacts

Disaster Management
Sri Lanka Flag
சனநாயக சோஷலிசக் குடியரசு

------------
announcements
------------


 

Dec 26, National Safety Day




ஜனாதிபதியின் இரண்டாவது பதவி பிரமாணத்தை முன்னிட்டு அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்திட்டத்தை மேம்படுத்தும் முகமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 80 லட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த தொலைத் தொடர்பு சாதனங்களும், களுத்துறை பிரதான பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு இயந்திரப் படகுகள் இரண்டும் பெற்றுக்கொடுக்கும் வைபவம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் திரு. மஹிந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் திரு. மஹிந்த சமரசிங்க அவர்கள் அம் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பிரதானிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனங்களைப் பெற்றுக் கொடுப்பதை படத்தில் காணலாம். இவ்வைபவத்திற்கு மேல் மாகாண சபை உறுப்பினர் சுமித்ரலால் மென்டிஸ், பேருவலை பிரதேச சபையின் தலைவர் பியல் நிஷாந்த மற்றும் களுத்துறை மாவட்ட பிரதி செயலாளர் டீ.டி.எஸ். பெரேரா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.


பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அண்மைக் காலமாக குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகள் காரணமாக அப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தொடர்பாக தேடிப்பார்ப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் திரு. மஹிந்த சமரசிங்க அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அவ்விஜயத்தின் போது அமைச்சர் பிரதேசவாசிகளுடனும், நகரசபை பிரதிநிதிகரளுடனும் நடத்திய பேச்சு வார்த்தையின் பின்னர் உடனடியாக அப்பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்றுவதற்குத் தேவையான பண வசதிகளும், உபகரணங்களும் பெற்றுக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தார். அமைச்சர் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.


தேசிய பாதுகாப்புத் தினம்

இலங்கை அரசாங்கம் 2006 டிசம்பர் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்புத்தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் இத் தேசிய பாதுகாப்பு தினத்தில் அனர்த்தங்களை எதிர் நோக்கத்தக்கதான தேசிய விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பல்வேறு அபாயமான நிகழ்ச்சிகள் இடம் பெறும் இந்நிலையில் அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்புத்தேடும் பண்பாடு ஒன்றை உருவாக்குவதும், அத்துடன் அனர்த்தங்களை தணித்துக் கொள்வதற்கான பயிற்ச்சியை ஏற்பாடு செய்வதும் இதன் நோக்கமாகும்.

பொது மக்களினதும் பாடசாலைப் பிள்ளைகளினதும் பங்களிப்புடன் விழிப்புணர்வை உருவாக்குவதற்கான உறுதுயான ஒருவழியாகவே தேசிய அனர்த்த பாதுகாப்புத்தின நிகழ்வு விளங்கும். அன்றைய தினத்தின் தொடக்கத்தில் அனைத்து சமயதளங்களிலும் காலை 9.25 முதல் 9.27 வரை இரு நிமிடங்களுக்கு மணி ஓசை ஒலிக்கும். அதேதினத்தின் பிற்பகலில் சமய நிகழ்ச்சிகள் பல இடம் பெறும்.

மாவட்ட செயலகம் 1. வேற்றுமையில் ஒற்றுமை என்ற பொருளில் அமைந்த சமய நிகழ்ச்சிகளின் மையமாக விளங்கும். அத்துடன், பாடசாலைப் பிள்ளைகளுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகளும் நடைபெறும். பாடசாலைப் பிள்ளைகளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஆரம்ப முயற்ச்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.


இரு தரப்பினரும் நட்பை மேம்படுத்தும் நோக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பேடி வில்லியம்ஸ் அவர்கள் குழுவின் முன்னிலையில் தலைமைத்துவம் வகிக்கின்ற அதேவேளை லோட் டோலாகியா, சைமன் பர்னஸ், க்ரேக் ஹென்ட்ஸ் ஆகியோர் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவார்கள்.


நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

நுவரெலியா மாவட்டத்தின் வலபனே, ஹங்குறன்கெத்த பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர். குறிப்பிட்ட பிரதேசங்களில் அனர்த்தங்களை குறைப்பதற்காக 20 மில்லியன் ரூபா பணத்தினை தேசிய கட்டிட பரிசோதனை நிலையத்திற்கு பெற்றுக் கொடுத்ததோடு, அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் P.B.ரத்னாயக அவர்கள் வலபனை நிஸ்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை மேற்பார்வையிடுவதை இங்கே படத்தில் காணலாம்.


களினி ஆற்றங்கரையை புனர்நிர்மாணம் செய்வதற்காக 10 மில்லியன் ரூபா

கம்பஹா அனர்த்த முகாமைத்துவ, மாவட்ட திட்டத்தின் கீழ் களனி ஆற்றங்கரையை புனர்நிர்மாணம் செய்வதற்காக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு 10 மில்லியன் ரூபாவை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் காசோலையை வழங்குவதை படத்தில் காணலாம். கம்பஹா மாவட்ட செயலாளர் R.M.ரூபரத்த அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கின் போது எடுக்கப்பட்ட படம்.


சுனாமி அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கை அனுபவத்தை மீண்டும் நினைவுகூறுதல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு முடிந்தமையையும் அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை மீண்டும் நினைவு கூறுவதற்கு அவ்வனுபவங்களை நன்மை பயக்க கூடியவாறான செயற்பாடுகளுக்கு உபயோகிக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் திரு. மஹிந்த சமரசிங்க செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

செப்டெம்பர் 12 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் இலங்கையிலும் சுனாமி அனர்த்தம் ஏற்படும் என முன்னெச்சரிக்கை விடுக்கும் பணியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், புவியியல் மற்றும் நில அகழ்வுத் திணைக்களம்,நாரா நிறுவனம், பாதுகாப்பு அமைச்சுடன் அரச, அரச சார்பற்ற பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டமையால் துரித கதியில் கரையோர பிரதேச வாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் வேலைகள் இனிதே இடம் பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்ள நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அத்தோடு குறிப்பிட்ட முன்னெச்சரிக்கையை மக்களுக்கு தெரிவிப்பதற்கு இலத்திரனியல் ஊடகங்கள் F.M. சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஊடக நிறுவனங்களும், ரெலிகொம், மற்றும் டயலொக் நிறுவனம், பொலிஸ் திணைக்களம், முப்படையினர் உட்பட அனைத்து வகையிலும் உதவிகளை பெற்றுக் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதற்கு இச்சந்தர்ப்பத்தில் கடமைபட்டுள்ளேன்.

எவ்வாறாயினும் இந்த சுனாமி முன்னெச்சரிக்கையானது தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரையிலான மக்களிடையே கொண்டு செல்லும் போது பெற்றுக்கொண்ட அனுபவத்தை மீண்டும் நினைவு கூறுவதோடு, இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இது எடுத்து காட்டுகின்றது.

எனவே இது தொடர்பாக நன்கு அனுபவமிக்க திறன்களை கொண்டவர்களையும் நிறுவனங்கள் மற்றும் உதவியவர்களை மாகாண ரீதியாக சந்தித்து அவர்களோடு இது தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் திட்டத்தை அமுல்படுத்தல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள களனி நதிக்கரையை அண்மித்த பிரதேசங்களுக்கு கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தொடர்பாடல் பிரிவின் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் களனி ஆற்றின் இரு புறங்களும் இடிந்து செல்வதை தவிர்த்துக் கொள்ளவதற்காக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நதிகளுக்கு அண்மையில் வசிக்கும் மக்களை காப்பாற்றவும், அவர்களின் உடமைகளை பாதுகாக்கவும் முடிந்தது. எனவே பிரதேச மக்களிடையே இந்நடவடிக்கை வரவேற்கப்பட்டது. இந்த தீர்வு அனர்த்த நிலைமை தொடர்பாக கண்கானிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் 2007.05.16 ம் திகதி அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தார். மேற்குறிப்பிட்ட புனர் நிர்மாண பணிகளுக்காக சுமார் 100 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொடுப்பதற்கு மனித உரிமைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.


சுனாமி அனர்த்தத்தின் போது| “அம்பியுலன்ஸ்’’ வசதிகளை பெற்று தந்த முன்னோடி தொண்டர் சேவையாளர்களை கெளரவித்தல்

சென். ஜோன்ஸ் “அம்பியுலன்ஸ்’’ தொண்டர் சேவைக்கு 100 வருடங்கள் பூர்த்தியடைவதை யொட்டியும், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முன்னோடியாக அம்பியுலன்ஸ் வசதிகளை பெற்றுக் கொடுத்த தொண்டர் சேவையாளர்களை கெளரவித்து அண்மையில் கொழும்பில் சன்மானங்கள் வழங்கப்பட்டது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சேவையின் கட்டளையிடும் அதிகாரி ஒருவருக்கு பதக்கம் அணிவிப்பதை படத்தில் காணலாம்.


ஜெனிவாவில் நடைபெற்ற 15 வது வளிமண்டலவியல் கருத்தரங்கில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பங்கேற்பு

ஜெனிவாவில் நடைபெற்ற 15வது வளிமண்டலவியல் தொடர்பான கருத்தரங்குக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் இலங்கை சார்பாக பிரதி நிதித்துவம் செய்திருந்தார். அவருடன் மேலும் சிலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உட்பட குழுவினர் கருத்தரங்கில் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.


15 வது உலக வளிமண்டலவியல் கருத்தரங்கில் அமைச்சரின் உரை

இம்முறை ஜெனிவாவில் நடைபெற்ற (07.05.2007) 15 வது உலக வளிமண்டலவியல் கருத்தரங்கில் வளிமண்டலவியல் ஆராய்வு பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை சார்பாக பிரதம உரை ஆற்றினார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இக்கருத்தரங்கில் உலக நாடுகளிலுள்ள உயர் அரச அதிகாரிகள், வளிமண்டலவியல் விஞ்ஞானிகள் என பலரும் கலந்து கொண்டனர். இலங்கை உலக நாடுகளுடன் கொண்டுள்ள நட்பை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் ஆற்றிய உரைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஹொரவ்பத்தானையில் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையம்

அண்மையில் அநுராதபுர மாவட்டத்திலுள்ள ஹொரவ்பத்தானை தேர்தல் தொகுதியில் புதிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. இதனை அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க திறந்து வைத்தார்.

ரஜரட்ட அபிவிருத்தி கலகத்தின் தலைவரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் S.M. சந்திரசேன அவர்களின் வேண்டுகோளுக்கமைய இத்தாலி மற்றும் அவுஸ்திரேலிய மாநிலத்தின் மாகாண சபையினால் 80 மில்லியன் ரூபா செலவில் இந்த மத்திய நிலையத்தில் கணனி பிரிவு, தீயணைப்பு பிரிவு ஆகியன திறந்து வைக்கப்பட்டது.

 

 

--------------------------