home|information|documents|news|programs|resources|contacts

Disaster Management
Sri Lanka Flag
சனநாயக சோஷலிசக் குடியரசு

------------
announcements
------------


குழுக்கள்

மனித உரிமைகள் பிரிவு

அமைச்சின் மனித உரிமைகள் பிரிவு பல நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. நாட்டில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை மேம்படுத்துவதிலும், சர்வதேச சமூகத்தினரிடையே இலங்கையின் கீர்த்தியை நிலைநாட்டுவதிலும் அதிக அக்கறை செலுத்தப்பட்டுவருகின்றது. இலங்கையரின் மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு அமைச்சு அனுசரணைப் பங்களிப்பை நல்கி வருகின்றது. அமைச்சு தன் சொந்த செயற் திட்டங்களை ஆரம்பித்து, நடைமுறைப் படுத்துவற்கென ஒரு பிரிவு இல்லாதுபோனாலும், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அலுவலகத்தின் உதவியுடன் ஆலோசகர், தன்னார்வ தொண்டர்கள், சர்வதேச தன்னார்வ தொண்டர்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட ஆளணியுடன் கூடிய பிரிவொன்று அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. மனித உரிமைகளிலும், மனித நேய நடவடிக்கைகளிலும் அனுபவம் பெற்ற குழு ஒன்றும் இயங்கி வருகின்றது.

மனித உரிமைகள் பற்றிய நிரந்தர நிலைக் குழு

இக்குழுவிற்கு கௌரவ அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் இணைத் தலைவர்களாக விளங்குகின்றனர். இக் குழுவில் முக்கிய தேசியமட்ட கொள்கை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. இக்குழுவின் தீர்மானங்கள் மனித உரிமைகள் பற்றிய அக - அமைச்சர்கள் குழுவினூடாக செயற்படுத்தப்படுகின்றன.

அமைச்சருக்கான மனித உரிமைகள் பற்றிய ஆலோசனைச் சபை

மனித உரிமைகள் பற்றிய மீறல்கள் அல்லது மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற் கொள்வதிலும், தடுத்தல் மற்றும் தணித்தல் தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவுமென ஒர் ஆலோசனைச் சபை அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மீறல்கள், நேரிடக் கூடிய மீறல்கள் அல்லது மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் பற்றிய அறிக்கைகளின் உண்மைத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்கும் இந்த ஆலோசனைச் சபை பயன்படுத்தப்படும். இதன் பெறுபேறாக, சம்பந்தப்பட்ட அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்கள், முகவர் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சட்டமா அதிபர் திணைக்களம், மாகாண மற்றும் உள்ளூர் சபைகள், சிவில் சமூக அமைப்புகள் போன்ற நிறுவனங்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியும் அவற்றுடன் இணைந்தும் தகுந்தவாறு, போதுமான அளவு விவரங்களைப் பெறுவதற்கு அமைச்சு அனுசரணை வழங்கும். இச்சபை 12 சிவில் சமூகத்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. நாட்டின் மனித உரிமைகள் பற்றிய நிலைவரத்தை ஆராயும் பொருட்டு, இச்சபை 3-4 வாரங்களுக்கு ஒரு தடவை கூடுகின்றது. இதுவரை எட்டு (8) கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய அக அமைச்சர் குழு

இக்குழு, மனித உரிமைகள் பற்றிய நிரந்தர நிலைக் குழுவின் செயற்படுத்தும் அமைப்பாகப் பணியாற்றுகின்றது. அனர்த்த மற்றும் மனித உரிமைகள் கௌரவ அமைச்சர் இதன் தலைவராவர். இதுவரை எட்டு (8) கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. இக் கூட்டங்களில் ஆயுதப் படைகள், பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளும், மனித உரிமை நடவடிக்கைகளில் பங்கு கொண்டு உழைக்கும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும், நாட்டின் நிலைமை குறித்து ஆராயப்படுவதுடன், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான மூலோபாயங்களை கண்டுப்பிடிப்பதற்கு கூட்டான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வரங்கில் கலந்துரையாடப்பட்ட சில முக்கிய விடயங்கள் வருமாறு:

• மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி புலன் விசாரணைகள் நடத்தி, அவ் விசாரணைகள் பற்றிய அறிக்கைகளை கேட்டுப்பெறுவதற்கு சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குதல்;
• உத்தியோக மொழிக் கொள்கையை அமுல் செய்தல்; • மனித உரிமைகள் பற்றி கல்விசார் மற்றும் விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் செய்தல்;
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன அமைப்பாக விளங்குவதை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்;
• அரசியல் யாப்புக்கான மனித உரிமைகள் பற்றிய புதிய மசோதாவினை வரையும் செயலூக்கக் குழுவுக்குரிய தொழில்நுட்ப உதவியை ஒருங்கிணைத்தல்;
• சமயம் தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கை பற்றிய தொழிற்படு குழுவுக்குரிய தொழில்நுட்ப உதவியை ஒருங்கிணைத்தல்;
• சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கை பற்றிய தொழிற்படு குழுவுக்குரிய தொழில்நுட்ப உதவியை ஒருங்கிணைத்தல்;
• ஒப்பந்த சபையின் பரிந்துரைகள் பற்றிய தொழிற்படு குழுவுக்குரிய தொழில்நுட்ப உதவி (சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஒருங்கிணைக்கப்படுவது);
• கைது செய்தல் மற்றும் தடுத்துவைத்தல் பற்றிய மேதகு ஜனாதிபதியின் பணிப்புரைகளை அமுல் செய்தல்;
• மேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட எட்டு (8) உறுப்பினர்கள் அடங்கிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நியமித்தல் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அவசியமான உதவியை ஏற்பாடு செய்தல்;
• மேற்போந்த சுயாதீன விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு சர்வதேச சுயாதீன அறிஞர் குழுவை நியமித்தல் தொடர்பாக உதவி வழங்குதல்;
• மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டத்தை வரைவதற்கு தொழில்நுட்ப உதவி வழங்குதல்;
• ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டங்களில் பங்கெடுக்கும் இலங்கைத் தூதுக் குழுவை தயார் செய்தல்;

தகவல் பரம்பல்

பொதுமக்களுக்கு அக்கறையுள்ள விடயங்கள் பற்றி சரியானவையும், மிகப்பிந்தியவையுமான தகவல்களையும் வழங்குவற்காக அமைச்சுக்கு இணையத்தளத்தை நிறுவுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அனர்த்தங்கள் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் தொடர்ப்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கும், சேதங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் இந்த இணையத்தளம் பயன்படுத்தப்படும். இகற்கென நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச மனித ௨ரிமை௧ள் தினம்

2006 டிசம்பர் 10 இல் வரும் சர்வதேச மனித உரிமைகள் தின கொண்டாட்ட வைபவத்தில் பின்வரும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

• கண்காட்சி
• மாவட்டங்களில் வீதிநாடகங்கள்
• பாடசாலை மாணவர்களிடையே ஓவியப் போட்டி
• புகைப்படக் கண்காட்சி
• திரைப்படக் காட்சிகள்
• உதவி நிலையங்களை ஒழுங்கு செய்தல்

தோட்டத் தொழிலாளர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தல்

தோட்டத் தொழிலாளர்களக்கு பிறப்புச் சான்றிதழ்கள், விவாகச் சான்றிதழ்கள் போன்ற அடிப்படையான சட்டச் சான்றுகளை பெற்றுக் கொடுப்பதில் உதவி செய்யும் பொருட்டு காலி மாவட்டச் செயலாளர் வழிகாட்டுத்திட்டமொன்றை உருவாக்கி வருகிறார்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரண சேவைகளை ஒருங்கிணைத்தல்

நாட்டின் சில பகுதிகளில், முக்கியமாக, 2006 யூன் மாதத்தின் பின்னர் வன்செயல்கள் அதிகரித்துள்ளதால் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த இந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை மேலும் திறன் மிக்கதாகவும் கூட்டாகவும் மேற்கொள்ளும் பொருட்டு இத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியை மேதகு ஜனாதிபதி இவ்வமைச்சிடம் ஒப்படைத்தார். இடம் பெயர்ந்த மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கௌரவ அமைச்சரின் தலைமையில் நடைபெறுகின்றன. மூன்று வாரங்களுக்கு ஒருதடவை நடைபெறும் இக் கூட்டங்களில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான ஆணையாளர், போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் மற்றும், மனிதாபிமான உதவிகளை ஏற்பாடு செய்து, வழங்குவதில் சம்பந்தப்பட்டுள்ள பொது நிறுவனங்கள், இடம் பெயர்ந்த மக்கள் வாழும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் என்போரும் பங்குபற்றிவருகின்றனர். செயற்பாட்டு மட்டத்தில் அமுல் நடத்தல் பிரச்சினைகள் பற்றி சம்பந்தப்பட்ட சகல பங்காளிகளுடன் கலந்துரையாடப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான விடயங்கள் பின்வருமாறு:

• கடல்மார்க்கமாகவும், தரைமார்க்கமாகவும் வடக்கிற்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து; • வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு நிவாரண சேவைகளை வழங்கும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்/ அரசசார்பற்ற நிறுவனங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கென வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
• இடம் பெயர்ந்த மக்கள் தங்கும் முகாம்களுக்கு அடிப்படை வசதிகளை, முக்கியமாக ஆரோக்கிய மற்றும் சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுப்பதில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள்/ அரசசார்பற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்.
• மனிதாபிமான உதவிகளை ஏற்பாடு செய்வதில் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு மாவட்ட செயலாளர்களின் தலைமையிலும் அவ்வப்பகுதி இராணுவ கட்டளையிடும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், ஒரு அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
• யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் போக்குவரத்து வசதியின்றித்தவிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்தல்.
• நெருக்கடிக்குள் வயப்பட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்களை ஸ்திர நிலைக்கு கொண்டுவரவும் வெவ்வேறு இனக் குழுக்களுக்கிடையே கலவரங்கள் தோன்றுவதை தவிர்ப்பதற்குமென விரிவான ஊடக கருத்துருவாக்கப் பிரசாரத் திட்டம்.
• பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏறத்தாள 250 முறைபாடுகள் பற்றி தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
• சுனாமிப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவென மாவட்டமட்டத்தில் "உதவிநிலையம்" அமைக்கப்பட்டு வருகின்றது.
• உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கென ஐக்கிய நாடுகள் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான ஆணையாளரினால் இவ்வமைச்சிக்கு 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.


 

 

--------------------------