![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|
|
முக்கிய நிகழ்சித்திட்டங்கள்
இந் நோக்கங்களை எய்தும் நோக்கில் வலிமண்டலவியல் திணைக்களமும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையமும், மனித உரிமைகள் பிரிவும் பின்வரும் மூலோபாய திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன : 01. இலங்கையில் அனர்த்த முகாமைத்துவத்துக்காக "அனர்த்த அபாயத்தைத் தணிப்பதற்கான வழிகாட்டி" என்ற பெயரில் அமைந்த 10 ஆண்டுத்திட்டத்தை தயாரித்தல். (இந்த இலக்கை அடைவதற்கு 109 கருத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன) 02. மாவட்ட அனர்த்த தயார்நிலைத் திட்டத்தை தயாரித்தலும், அமுல் படுத்தலும். 03. முன்னெச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்தல். 04. அனர்த்த முகாமைத்துவத்திற்கு உகந்த விழிப்பூட்டல் மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துதல். 05. மனித உரிமை மீறல்கள் பற்றிய பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நிறுவனங்களுடன் ஒன்றிணைத்தல். 06. மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்தும் நாட்டிலுள்ள நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கல். 07. மனித உரிமைகள் துறையில் விழிப்பூட்டலையும் பயிற்சியையும் வழங்கும் நிறுவனங்களுக்கு உதவி வழங்கல். 08. மனித உரிமைகள் சர்வதேச நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்தும் கருவிகளைத் துரிதப் படுத்துவதற்காக உதவி வழங்கல். 09. முரண்பாடுகள் காரணமாக அகதிகளான சமுதாயத்தின் பகுதியினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய மட்டத்தில் சேவைகளை ஏற்பாடு செய்வதற்கான சம்பந்தப்பட்ட சகலரையும் ஒருங்கிணைத்தல். மகிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டம்
மகிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின் வாயிலாக எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எய்துவதற்கு இந் நிகழ்ச்சித் திட்டத்தை ஒதுக்கித்தரப்பட்ட நிதிகளுடன் அமுல் நடத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பின்வரும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 01. அமைச்சுக்கு பொதுவாக ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, மகிந்த சிந்தனையின் கீழ் “அனர்த்த அபாயத்தை தணித்தல்” என்ற தலைப்பின் கீழ் ரூபா 48 மில்லியன் பெறப்பட்டது. 02. மகிந்த சிந்தனையின் கீழ் அனர்த்தங்களைத் தணிக்கும் நோக்கத்திற்காக பல்வேறு சிறு கருத்திட்டங்கள் திறைசேரி அனுமதி பெறப்பட்டுவதற்காக சமர்பிக்கப்பட்டுள்ளன. இவை 2007 இல் செயற்படுத்தப்படவிருக்கின்றன. அரசியல் யாப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு திருத்தங்களை பிரேரிக்கவென அரசியல் யாப்பு விவகார மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான அமைச்சுடன் சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "மஹிந்த சிந்தனை திட்டத்தை" பார்ப்பதற்கென இங்கே அழுத்தவும்.
|