![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|
|
தற்போதைய செய்திகள் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பிரதம செயலாளரின் பிரதிநிதி திரு.வோல்டர் கலின் அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்ட போது அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களை சந்திக்கையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இங்கே காணலாம். இவ் விஜயத்தின் போது வோல்டர் கலின் அவர்கள் புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபை மனிதநேய விவகாரங்கள் ஓருகிணைப்பு அலுவலகம் ஐக்கிய நாடுகள் அவசரக்கால நிவாரண ஓருங்கிணைப்பு அதிகாரி இலங்கை ஜனாதிபதியை சந்திக்கிறார் (நியுயோக் 09 ஆகஸ்ட்) ஐக்கிய நாடுகள் அவசரக்கால நிவாரண ஓருங்கிணைப்பு அதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் இறுதி நாளன்று, இலங்கையில் தாம் கண்ட மனித நேய நிலைவரம் குறித்து தமது அபிப்பிராயங்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பகிர்ந்துக் கொண்டார். பல மனிதநேய பல பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுக் காண்பது என்பது பற்றி சாதகமான சூழலில் கலந்துரையாடல் இடம்பெற்றது என்று இந்த சந்திப்பின் பின்னர் திரு.ஹோம்ஸ் தெரிவித்திருந்தார். மனிதநேய உதவி சம்மந்தப்பட்ட பல விடயங்களை முன்னெடுப்பதற்காக வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாவும் சாதகமான முறையிலும் அரை மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கு , கிழக்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனிதநேய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுடன் அண்மையில் நடைபெற்ற யுத்தத்தை அடுத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு , வாகரை ஆகிய பிரதேசங்களில் தம் சொந்த வீடுகளுக்கு திரும்பிய சுமார் 103,000 மக்களுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனங்களும் அரச சார்பற்ற அமைப்புகளும் உதவி வரும் பகுதிகளுக்கு தாம் மேற்கொண்ட விடயங்கள் குறித்து திரு.ஹோம்ஸ் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார். வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் புனரமைப்பதும் சிவில் நிறுவாகத்தையும் பொலிஸ் நிறுவாகத்தையும் மீளக் கொண்டுவருவதும் சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள் அவர்களது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஜனாதிபதின் கருத்தை திரு.ஹோம்ஸ் ஏற்றுக் கொண்டார். கிழக்கி , வடக்கு மாகாணங்களுக்கு மனிதநேய அமைப்புகள் செல்வதற்கான வசதிகளை தொடர்ந்தும் ஏற்படுத்தி கொடுப்பதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் திரு.ஹோம்ஸ் வலியுறுத்தினார். கிழக்கிலங்கையில் இயங்கும் துணை இராணுவப் படைகளிடமிருந்து ஆயுதங்களை களைவதற்கான திட்டம் குறித்து ஜனாதிபதி அளித்த உறுதி மொழியை அவர் வரவேற்றார். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்களினதும் யுத்தத்தினாலி பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களினதும் பாதுகாப்பை இத்திட்டம் பலப் படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையில் தாம் மூன்று நாட்கள் மேற்கொண்ட விஜயம் குறித்து கருத்து தெரிவித்த திரு.ஹோம்ஸ், யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பயனுள்ள வகையில் உதவ அரசாங்கத்திற்கும் மனிதநேய பணிப்பாளர்களுக்கிம் இடையே பலம் வாய்ந்த பங்களிப்பை ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியமாகும் எனறு கூறினார். மனிதநேய பணியாளர்கள் அவர்களது பணிகளை சிறப்பாக செய்ய முடியுமானால் கிழக்கிலங்கையின் மீட்பு பணியை மேற்கொண்டு சுமூகநிலையை கொண்டுவருவதற்கும் சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்றும் அவர் கூறினார். இலங்கைக்கான பொது மனிதநேய செயற் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதநேய கருத்திட்டத்திற்கென 2007 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 120 மில்லியன் அமெரிக்க டொலராகும். மனிதநேயப் பணிப்பாளர்களின் கொலைகள் குறிப்பாக ஒரு வருடத்திற்கு முன்னர் கிழக்கிலங்கையில் இடம்பெற்ற பிரெஞ்சு அசர சார்பற்ற நிறுவனத்தின் 17 உதவி பணியாளர்களது கொலைகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகள் விரைவில் பூர்த்திசெய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் திரு.ஹோம்ஸும் ஏற்று கொண்டார்கள். 13 ஆகஸ்ட் 2007 அதி உத்தமரே கடந்த வாரம் எனது இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவேற சகல விதத்திலும் உதவிய உங்களுக்கும் ஏனைய அரசாங்க உறுப்பினர்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர்களையும் சந்திக்கவும் வடக்கு, கிழக்கு நிலவரத்தை நேரில் சென்று பார்வையிடவும் சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. பாதுகாப்பை பொறுத்த அளவில் இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையும் நான் உணர்கிறேன். இதற்காகவும் , பேச்சுவார்தைகள் சுமுகமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் நடத்தப்பட்டமை குறித்து நன்றி கூறுகின்றன். பல்வேறு விடயங்களை முன்னெடுப்பதற்கு உறுதியான வழிகைகள் தொடர்பாக எமக்கிடையே உடன்பாடு ஏற்பட்டமை குறித்தும் இவற்றை அமுல்படுத்த திட்டங்கள் ஏற்கெனவே இருப்பது அல்லது இனி தயாரிக்கப்படுவதும் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமேதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ்வுடன் சாதகமான சந்திப்பு இடம்பெற்றிமை குறித்தும் நான் குறிப்பாக பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எனவே ரொயிட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு நான் அளித்த பேட்டியின் போது , கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் நான் பயன்படுத்திய சொற்பதங்கள் சில ஊடகங்கள் மத்தியில் முரண்பாடான கருத்தை ஏற்படுத்தி, மிகுதிப் பேச்சுவார்த்தைகளையும் எனது விஜயத்தையும் அரசாங்கத்துடன் ஏற்படக் கூடிய உறுதியான உறவையும் திரிவுபட வைத்துவிடும் அச்சுறுத்தல்கள் எழுந்தமை குறித்தும் ஆழ்ந்த கவலை அடைகிறேன். சிலப் தெரிவித்தது போன்று , இந்தப் பேட்டியின் போது வேண்டுமென்றே முரண்பாடான அல்லது எதிர்மறையான கருத்தை தெரிவிக்க நான் உண்மையில் முயற்சிக்கவில்லை . இதற்கு மாறாக, எனது விஜயம் முழுவதிலும் அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி ஒரேமாதிரியானவையே . மேலும் நீங்கள் அறிவீர்கள் , நான் சந்தித்த அனைவருடனும் மனிதநேய பணிப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து , உண்மையில் அக்கறை காண்பித்துள்ளேன். இதையேதான் உங்களுடன் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டிலும் குறிப்பிட்டுள்ளேன். எனவே, அரசாங்கம் இந்த விடயம் குறித்து அக்கறை காண்பிக்கவில்லை என்றோ மனிதநேய பணிப்பாளர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றோ ரொய்ட்டருடனான பேட்டியில் அல்லது உங்களுடனான சந்திப்பில் நான் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால் இடம்பெற்ற பயங்கர சம்பவங்கள் குறித்தும் வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கும் எங்கள் முயற்சிகள் அனைத்தையும் அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் நான் எடுத்துக் கூறியுள்ளேன். எப்பொழுதும் இதுதான் என் கருத்தாகும். நீங்களும் மற்றவர்களும் எனக்கு விளக்கிக் கூறிய AFC விவகாரத்தில் நடக்கவேண்டிய விடயங்கள் தொடர்ந்தது நடைபெறுமெனவும் குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதில் துரித முன்னேற்றம் இடம்பெறுமெனவும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் துரித முன்னேற்றம் இடம்பெறுமெனவும் நான் நம்புகின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக, பல விடயங்களில் நாம் பயனுள்ள வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.இந்த முக்கிய பிரச்சினைகளையும் கிழக்கில் காணப்படும் முன்னேற்றகரமான நிலைமையில் தோன்றும் புதிய விடயங்களையும் கையாள்வதில் நாம் இனணந்து செயல் படுவோம் எனவும் நான் எதிர்பார்க்கிறேன். மேன்மை தங்கிய திரு. மஹிந்த சமரசிங்ஹ அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசு கொழும்பு சில ஊடகங்களில் திரிபான செய்திகளை வெளியிட்டு எனது பெயரில் கலங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் , வருங்காலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து மேலும் ஆத்தப்பூர்வமாக செயல்படுவது எனது பேராவா என்பதாலும் எல்லாவற்றையும் கடந்து முன்னேறவேண்டிய அவசியம் இருப்பதாலும் பகிரங்கமாக பதிலளிக்க நான் விரும்பவில்லை. எனது விஜயத்தின் போது அரசாங்கம் அளித்த மகத்தான ஒத்துழைப்பு குறித்து இறுதியில் மீண்டும் நன்றி கூறுகின்றேன். அடுத்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி ராஜபக்ஷ்வும் அமைச்சரும் நிவ்யோர்க்கிற்கு மேற்கொள்ள இருக்கும் விஜயம் கடந்த வாரம் நாங்கள் நடத்திய கலந்துரையாடலின் நோக்கமான சாதகமான ஒத்துழைப்பை பலப்படுத்த மேலும் வாய்ப்பைத் தருகிறது. அதி உத்தமரே , எனது நன்றிகளைத் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள். ( ஒப்பம் ) ஜோன் ஹோம்ஸ் ஐக்கியநாடுகள் மனிதநேய விவகாரங்கள், அவசரக்கால அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பாளருக்கான துணைச் செயலாளர் நாயகம் மனித உரிமைகள் சபை 4வது மகாநாடு மஹிந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சென்ற கூட்டு மதிப்பீட்டுக் குழுவின் மீது எல்ரிரிஈ நடத்திய தாக்குதல் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் வெளிநாட்டுத் தூதுவர்கள்களும் உயர்ஸ்தானிகர்களும் மற்றும் அரச பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டு மதிப்பீட்டுக் குழுவினர் 2007, பெப்ரவரி 27இல் உள்ளூரில் இடம்பெயர்ந்த ஆட்கள் (IDP) தொடர்பான உண்மை நிலவரங்களை மதிப்பீடு செய்யும் முகமாக மட்டக்களப்பு சென்றிருந்த சமயம் எல்ரிரிஈயினர் அக்குழுவினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். மேலும்>>அரசாங்கத்தின் சார்பில் எரங்க குணவர்த்தன, சுகாதார மற்றும் போஷாக்கு அமைச்சினைச் சேர்ந்த கலாநிதி ஜெகநாதன்.
|
||||||