![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|
|
அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் ௮மைச்சு பற்றி…… ௮மைச்சின் செயற்பாட்டு வரையெல்லை 2006, பெப்ரவரி 20-ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள ௮மைச்சு தாபிக்கப்பட்டது. மேதகு ஜனாதிபதியினால் இப்புதிய ௮மைச்சின் முதலாவது அமைச்சராக கௌரவ மஹிந்த சமரசி்ங்க
நியமிக்கப்பட்டார். அமைச்சுக்கு குறித்தொகுக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு : 2. தேசிய கொள்கையின் அடிப்படையில் தேசிய அனர்த்தமுகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல். 3. 2005-ஆம் ஆண்டின் 13-ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை நிர்வகித்தலும், செயற்படுத்தலும். 4. அனர்த்தத்தை தணித்தல், பிரதிபலிப்பு மற்றும் மீட்டெடுப்பதற்கான வெளிநாட்டு உதவித்திட்டங்களை ஆரம்பித்து ஒருங்கிணைத்தல். 5. அத்தகைய பொறுப்பினை காலாகாலத்தில் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் பொருட்டு அமைச்சுக்கள், அரச அதிகாரசபைகள், மற்றும் முகவர் நிலையங்கள், தனியார் பிரிவின் முகவர் நிலையங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்,சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடனும் இணைந்து செயற்படுதல். 6. இயற்கையாலும் மனிதனாலும் ஏற்படக்கூடியவையான அனர்த்தங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு, முகாமைத்துவ, மற்றும் நிவாரண செயற்பாடுகள். 7. இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படக்கூடியவையுமான அனர்த்தங்கள் பற்றிய விழிப்பூட்டல் திட்டங்களை ஒருங்கிணைத்தல். 8. நேர காலத்துடனான முன்னெச்சரிக்கை முறைமைகள். 9. மனித உரிமைகள்பற்றிய நிவாரண, ஊக்குவித்தல் ஏற்பாடுகள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்பேண் தன்னார்வ முகவர் நிலையங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிடல். 10. அனர்த்தமுகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய துறைகளில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்பேண் முகவர் நிலையங்களைக் கண்காணித்தலும் அவற்றுக்கு உதவியளித்ததும். 11. மனித உரிமைகளை ஊக்குவித்தல். 12. மனித உரிமைகள் பற்றிய நிறுவனங்களுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகருடனும், ஏனைய சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் நிறுவனங்களுடனும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்த. 13. வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும். மேல் அட்டடவணைப் படுத்தப்பட்டுள்ள பணிகளுடன் சேர்த்து 2006 யூன் மாதத்துக்குப்பின் வடக்கு மற்றும் கிழக்கிலும் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளின் பொறுப்பும் மேதகு ஜனாதிபதியினால் இந்த அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் அரச நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் சிறப்பாக ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு, விசேடமாக சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கு கூடியபட்ச உதவித் தொகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|