home|information|documents|news|programs|resources|contacts

Disaster Management
Sri Lanka Flag
சனநாயக சோஷலிசக் குடியரசு

------------
announcements
------------


அமைச்சரின் பார்வை நோக்கு

Mahinda Samarasinghe

கௌரவ மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர், அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனுத உரிமைகள் அமைச்சராவர். இவர் முன்னாள் தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சரும், பிரதம அரசாங்க கொறடாவுமாவார். இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதம எதிர்கட்சி கொறடா பதவியையும் இவர் வகித்துள்ளார்.

இவர் அவுஸ்திரேலிய, மேல்போன் லா டிறோப் பல்கலைகழக பொருளாதார பட்டதாரி (சிறப்பு).

இலங்கை வெளிநாட்டுச் சேவையில் சேர்ந்த இவர் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளராகவும், ஜெனிவா, ஐக்கிய நாடுகளில் இலங்கையின் நிரந்தர பணியகத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் சர்வதேச தொழில்ஸ்தாபனம் (ILO), உலக சுகாதார இஸ்தாபனம் (WHO), சர்வதேச தொலைதொடர்ப்பு ஒன்றியம் (ITV), உலக வளிமண்டல ஸ்தாபணம் (WMO), ஆகிய அமைப்புகளில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தியவர்.

இவர் ஜெனிவாவில் இலங்கை தூதரத்தில் பணியாற்றிய சமையம் 1986 மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனைத்து ஆளுகைக்குழுக் கூட்டங்களிலும், 1985 முதல் 1987 வரை சர்வதேச தொழில் மாநாட்டிலும் (ILC) இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். 1987 சர்வதேச தொழில் மாநாட்டின் (ILC) இறுதியில் இவர் “தொழிலாளர் வீடமைப்பு” என்ற பொருளில் வரைவுத் தீர்மானம் ஒன்றை சமர்ப்பிப்பதில் வெற்றிகண்டார். அத் தீர்மானம் மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1985 – 1987 காலப்பகுதியில் உலகின் பல்வேறு நாடுகளுகளில் நடைபெற்ற சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பல பிராந்திய மகாநாடுகளிலும் திரு. சமரசிங்க பங்குகொண்டார்.

1988 இல் மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் திரு. சமரசிங்க தீவிர அரசியலில் பிரவேசித்தார். அதில் மாகாண சபையின் சபை முதல்வராகப் பணிபுரிந்தார். அத்துடன், சுகாதார மற்றும் பொருளாதார கட்டமைப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவர் 1994 இல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப் பட்டதுடன் தேசிய அரசியலில் பிரவேசித்தார். பின்னர் 2000, 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் இவர் மீண்டும் தெரிவானார். 1994 – 2001 காலப்பகுதியில், எதிர்தரப்பில் இருந்த பொழுது, இவர் எதிர்க்கட்சி பிரதி பிரதம கொறடாவாக கடமையாற்றினார். சுகாதார மற்றும் பொருளாதார உட் கட்டமைப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், வர்த்தக மற்றும் வாணிபம், நிதி, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சர்வ பாராளுமன்ற ஒன்றியத்துக்கு (IPU) இவர் தெரிவுசெய்யப்பட்டமை சர்வதேச அரசியலில் தீவிர பங்கேற்க இவருக்கு வாய்ப்பினை ஏற்பத்திக்கொடுத்தது. இவர் சர்வ பாராளுமன்ற ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக விருந்து இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சர்வ பாராளுமன்ற ஒன்றியத்தில் இவர் 1996 முதல் 1999 வரை மனித உரிமைகள் குழுவின் பதில் நிலை உறுப்பினராகச் செயற்பட்டார். அதன் பின் இவர் அதே குழுவின் அங்கத்துவ நாமத்திற்குரிய உறுப்பினராக 1999-2004 காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் ஜெனீவா, சர்வ பாராளுமன்ற ஒன்றியத்தில் பாராளுமன்றினரின் மனித உரிமைக்கான குழுவின் உப தலைவராகவும் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ஒரு முன்னணி மனித உரிமைகள் ஆர்வலரான திரு.சமரசிங்க இலங்கை மனித உரிமைகள் செயலணிக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான பாராளுமன்ற குழுவின் நிறைவேற்று உறுப்பினராகவும் விளங்கும் இவர், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவராவார்.

இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில், முக்கியமாக நாட்டில் தொடர்ந்துவரும் வடக்கு , கிழக்குப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வை ஈட்டுவதில் உதவியளிப்பது பற்றி இவர் அதிக ஆர்வத்துடன் செயற்பட்டு வந்துள்ளார்.

திரு.சமரசிங்க இப்பொழுது இலங்கை- அவுஸ்திரேலிய பாராளுமன்ற சங்கத்தின் தலைவராகவும், இலங்கை-சுவிஸ் பாராளுமன்ற சங்கத்தின் தலைவராகவும், இலங்கை-இந்திய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளராகவும், இலங்கை-கொறிய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளராகவும், இலங்கை-தாய்லாந்து பாராளுமன்ற சங்கத்தின் செயலாள௫மாக உள்ளார். அத்துடன், சுனாமிப் பேரலையின் பின்னரான இயற்கை அனர்த்தங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக ஏகமனதாக இவர் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்களில் விசேட அக்கறை செலுத்தியுள்ளார். குறிப்பாக, நாட்டின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையூடாக தீர்வொன்றைக் காண்பதற்கு உகவியளிப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி ) அரசியல் யாப்பு விவகார குழுவின் ஓர் உறுப்பினராகவிருந்தவர் இவர், 1999- இல் ஆறுமாதகாலமாக இலங்கை ஐனாதிபதியுடன் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரசியலமைப்பு விவகார ஆறு உறுப்பினர் தூதுக்குழுவின் ஓர் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் இவர் தொடர்ந்தும் தீவிர பங்கினை வகித்து வருகிறார்.

திரு. சமரசிங்க திருமணமானவர். அவருக்கு பிள்ளைகள் மூவர்.


 

 

--------------------------