![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
|
|
தற்போதைய செய்திகள் தலைவர் அவர்களே, உயர் ஸ்தானிகர் அம்மையாரே, கனவான்களே, விசேட பிரதிநிதிகளே, தலைவர் அவர்களே, மனித உரிமைகள் ஆணைக்குழு, குறிப்பாக அதன் சட்ட ஆட்சிப் பிரிவு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும் பிராந்தியத்தில் சாட்சிகளை முன்வைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் தேசீய நிறுவனங்களுக்கும் வழங்கிய அரிய ஆலோசனைகள் மற்றும் ஆதரவுக்காக இச்சந்தர்ப்பத்தில் நான் அதற்கு நன்றிகூறக் கடைமைப்பட்டுள்ளேன். தலைவர் அவர்களே, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளூரிலேயே இடம் பெயர்ந்தவர்களுக்கு குறுகியகால, நீண்டகால தீர்வுகளை வழங்க தற்போதைய இக்கட்டான சூழலிலும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டுவரும் இவ்வேளையில் மனித உரிமை பேணல் தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சபைக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியற்றின் தூதுவர்களுடனும் ஐக்கியநாடுகள், அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனும் தேவைகளைக் கண்டறிவதற்கான மதிப்பீட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நான் கிழக்கு மாகாண நகரான மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேனர். மட்டக்களப்பில் நாங்கள் ஹெலிகொப்டரிலிருந்து இறங்கியதும் இக்குழுவினர் மீது விடுதலைப்புலி இயக்கத்தினர் மோட்டார் தாக்குதலை நடத்தினார்கள். சிலர் காயமடைந்ததுடன் குழுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு மத்தியிலும் நாம் எடுத்துக்கொண்ட பணியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொண்டோம். கண்ணிவெடி அகற்றி பாதுகாப்பை வழங்கி அத்தியாவசிய அடிப்படைக் கட்டமைப்பையும் ஏனைய சேவைகளையும் வழங்கிய பின்னர் அகதிகளை அவர்களது விருப்பத்தின் பேரில் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டோம். மின்சார வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. சுகாதார வசதிகள், பாடசாலை வசதிகள் ஆகியன உட்பட நிருவாக கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவாக கட்டமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, நாட்டின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள் விநியோகங்களையும் ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் பொருள் விநியோகக் குழு தெரிவித்த விதப்புரைகளின் அமுலாக்கத்தை மதிப்பிடுவதற்காக இதேபோன்ற பயணம் ஒன்றை நான் மேற்கொண்டேன். ஐக்கிய நாடுகள் குழு இலங்கை, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்து இந்த விதப்புரைகளை தெரிவித்திருந்தது. உணவுப் பொருள்களையும் அத்தியவசிய பொருள்களையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தாக்குதல்களை நடத்துகின்ற போதிலும் வடபகுதிக்கான மாதாந்த தேவைகள் அனுப்பப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்து வருகிறது. 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக தரைப் பாதை மூடப்பட்டதன் பின்னர் இதுவரை கடல் மார்க்கமாக 75,000 மெற்றிக் தொன் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த உதவித் திட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள சர்வதேச சமூகத்திற்கும் ஐநா நிறுவனங்களிற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். சிவிலியன்களுக்கு விநியோகங்களை வழங்குவது அரசாங்கத்தினது முன்னுரிமைத் திட்டமாகும். விடுதலைப்புலிகளின் மோசமான ஆத்திரமூட்டும் செயல்களுக்கும் தாக்குதல்களுக்கும் மத்தியிலும் அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் உள்ளது என்றும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பெப்ரவரி மாதத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அரசியல் ஒருமைப்பாட்டை எய்துவதற்குமான அரசாங்கத்தின் விருப்பத்தை இந்த அறிவிப்பு பிரதிபலிப்பதை உணர முடிகிறது. தலைவர் அவர்களே, மனித உரிமைகள் சபையின் தீவிர ஈடுபாடுடைய ஸ்தாபக அங்கத்துவ நாடு என்றவகையில் இலங்கை இந்த சபையின் விசேட நடைமுறை உத்திகளுடன் வெளிப்படையானதும் உறுதியானதுமான செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த விடயம் குறித்து சுவிற்சர்லாந்து தூதுக்குழு கேள்வி எழுப்பியதால் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றி அதிகாரபூர்வமான இரு அதிகாரிகளான சித்திரவதைகள் தொடர்பான விசேட பிரதிநிதிகளையும் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதியையும் முறையே ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. உண்மையில், இவர்கள் வருவதற்கு பொருத்தமான திகதிகளை அறிவிக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது. இந்த விஜயங்களினால் நாம் அமுல் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான விதப்புரைகள் தெரிவிக்கப்படுமென நம்புகிறோம். தலைவர் அவர்களே, இலங'கை அரசாங்கம் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து தீர்வுகாண சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும் அதேவேளையில் தடுப்பு முயற்சிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் கைதுகள், தடுப்புக்காவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவை அமுல்செய்யும் போது அரசியல் யாப்பில் உத்தரவாதம் செய்யப்பட்டு அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தொடர்பாக நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து பொலீஸ்மா அதிபர் நாடெங்கிலுமுள்ள பொலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளனர். எனது தலைமையில் மாதமொரு தடமை கூடும் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மட்ட குழு கிரமமான முறையில் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமாகியுள்ளது. தலைவர் அவர்களே, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆற்றல் விருத்தி ஆகியன தொடர்பான சில வார்த்தைகளை தெரிவித்து எனதுரையைப் பூர்த்திசெய்ய விரும்புகிறேன். மனித உரிமைகள் சபையின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆற்றல் விருத்திப் பிரிவு இந்த அமைப்பின் அடிப்படை அத்திவாரமாக விளங்குகிறது. அமைப்பின் விருத்தி அம்சம், நிலைத்து நிற்கும் தன்மை ஆகிய இரண்டையும் ஊக்குவிப்பது அவசியமாகிறது. கடந்து வருடத்தில் எனது அமைச்சு பல்வேறு முயற்சிகளில் இந்த அமைப்புடன் ஈடுபாடு கொண்டிருந்தது. இத்தகைய வெளிப்படையான உரையாடல்கள் மேலும் தொடரும். உடன்படிக்கை சீரமைக்கப்படுவதை ஊக்குவிப்பது என்ற இலங்கையின் வாக்குறுதிக்மைய, எங்கள் வேண்டுதலின் பெயரில் அறிக்கை தயாரிக்கும் பணியை இலகுவாக்க முடியுமா ன்பதைச் சோதிப்பதற்கான முன்னோடி முயற்சிக்கு பயன்படக்கூடிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை சபை எமக்கு வழங்கியுள்ளது. தலைவர் அவர்களே, முடிவாக, சபைக்கான எங்கள் ஆதரவின் ஆக்கபூர்வ பங்களிப்பாக தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான நன்கொடை நிதியத்துக்கு 10,000 அமெரிக்க டொலரை வழங்குவதென்ற எங்கள் உறுதிமொழியை கடந்த வாரம் நிறைவேற்றியுள்ளோம். தலைவர் அவர்களுக்கு நன்றி.
|