SINHALATAMILENGLISH


சமூக ஒருமைப்பாட்டிற்கான பாதை 1 அபிவிரூத்திக்கான கல்வியும் முதலீடும்

பேராசிரியா் ரஜீவ விஜேசிங்க அவா்களின் சொற்பொழிவின் விரிவான மொழிபெயா்ப்பு - Biz Pact முதலீட்டுக் கூட்டம் பொது நுாலகம் சனவரி 6, 2010

முதற்கண் எனக்கு உங்களது முதலீட்டு கூட்டத்தின் 3வது குழுவில் சொற்பொழிவாற்றுவதற்கு சந்தா்ப்பம் வழங்கிய சமாதானத்திற்கான வியாபார கூட்டணி (Business for Peace Alliance)ற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு எனது சொற்பொழிவை ஆரம்பிக்கின்றேன். நான் முதலீட்டு சந்தா்ப்பங்கள் மற்றும் செயல்முறை உதவிகள் தொடா்பாக சொற்பொழிவாற்றுவதையிட்டு கூச்சமடைகின்றேன். ஏனெனில், நான் இத்துறையில் நிபுணத்துவம் பெறவும் இல்லை. அத்துடன் நான் ஓா் தொழில்சார் வியாபாரியுமல்ல. இத்துறையானது சனச வங்கி, முதலீட்டுச் சபை மற்றும் தொழிலதிபர் சம்மேளனம் போன்ற இத்துறையில் நிபுணத்துவம் பெற்றோர்களின் பரப்புக்குள் வரும் விடயமாகும்.

அவா்கள் ஏற்கனவே சிறந்த முறையில் சொற்பொழிவாற்றியுள்ளனா்.எனவே இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு ஓா் முக்கியமான எண்ணக்கரு ரீதியான ஓா் விடயத்தை தெரிவிக்கின்றேன்.
நீங்கள் யாழ்ப்பாண வீதிகளில் நேற்று எவ்வாறு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது என்பதை கண்டிருப்பீா்கள். ஒரு மாதத்திற்கு முன் இவ்வாறான ஓா் நிலைமை ஏற்படுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. இருப்பினும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னா் நான் முதற்தடவையாக இங்கு விஜயம் மேற்கொண்ட வேளையிலிருந்து நிலைமை தொடா்ந்தும் முன்னேற்றமடைந்து வருகின்றது இதை நான் 2008 ஆம் வருட இறுதியில் எதிர்கால சிந்தனையாளா்களுக்கான கண்காட்சி (Future Minds Exhibition) அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வந்தசமயம் உணா்ந்தேன். நான் யாழ் பொது நுாலகம் எரிந்து நாசமானதன் பின்னா் ஆகஸ்ட் 1981 இல் இங்கு வந்துள்ளேன். இது அமைச்சா்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான ஓா் நடவடிக்கையாக தென்பட்டாலும் அதிர்ஸ்டவசமாக அவ்வாறான ஓா் கலாசாரம் அரசாங்க அரசியல் கட்சியில் அழிந்துவிட்டதாக காணப்படுகின்றது.


நான் 60 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இங்கு வந்திருந்தபோத அதாவது நான்கு தசாப்தங்களுக்கு முன் காணப்பட்ட செழிப்பு மீண்டும் மலர ஆரம்பித்துள்ளதாக 2008 இல் புதிய பொது நுாலகத்தில் ஆரம்பமான கண்காட்சியை இரசிப்பதற்கு வந்து குவிந்த இளைய தலைமுறையினரை, குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தில் நாட்டம் கொண்ட இளைய தலைமுறையினரை கண்டபோது எனக்கு தோன்றியது.

தற்போதைய ஆளுனரும் அப்போதைய பாதுகாப்பு படைகளின் கட்டளையிடும் அதிகாரியுமான ஜெனரல் சன்றசிரி வடக்கின் பலபாகங்களில் வன்முறை காணப்பட்ட போதும் தீா்க்க தரிசனமான இந்த கண்காட்சியை புதிய நுாலகத்தில் 2008 இல் நடாத்த வழியமைத்திருந்தார். அவரால் நிலைமைகள் மாற்றமடைந்து வருகின்றதையும் யாழ்ப்பாண மக்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்கும் தொழில் முயற்சிகளுக்கும் திரும்பும் மனோநிலையில் காணப்படுவதையும் அறியமுடிந்தது. இப்பொது மன்றமானது இந்நிலைமையை மேலும் வலுவூட்டும் என நான் நம்புகின்றேன்.

இது தொடா்பில் 'தொழில்முயற்சி' என்ற சொற்பதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இத்தசாப்தத்தில் ஏற்பட்ட பெரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவெனில் வன்முறை கலாசாரத்தின் ஆரம்பமும் அதனால் தோன்றிய தாயகக் கோட்பாடும் மனநிலையும் அதனால் ஏற்பட்ட தனிமனித முயற்சிகளின் மழுங்கடிப்பானது துரதிஸ்டவசமாக இம்மனோநிலை உலகளாவிய ரீதியாக காணப்பட்டதுடன் அதன் காரணமாக ஏனைய நாடுகளைப் போல நாமும் ஒரு வரையறைக்குள் தள்ளப்பட்டு வருந்தினோம். இவ்வாறாக ஒரு நாடு தனிமைப்பட்டிருந்தால் அதனால் முன்னேற்றம் அடையமுடியாதென்பதை உலகம் நன்கு விளங்கிக் கொண்டுள்ளது.விசேடமான பொருளாதார மற்றும் கல்விக் கலாசாரத்தை கொண்ட யாழ்ப்பாணத்தில் இக்கட்டுப்பாடுகள் (வறையறைகள்) செயற்பாடுகளை முடக்கின.

செழிப்பை ஊக்குவிப்பதில் அரசிற்கு ஒரு பிரதான பங்கு இல்லை என்பது கூறமுடியாது. அரசு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் முழுமூச்சுடன் வேலைசெய்ய வேண்டியுள்ளது.அரசின் வேலைத்திட்டம் பெளதீக உட்கட்டமைப்பு வசதியை மட்டுமல்லாது மனித வளத்தையும் உள்ளடக்க வேண்டும்.சிறந்த தொடா்பாடல் பயன்கள் சுகாதாரம் மற்றும் சகலருக்குமான கல்வி என்பன தொடா்பான அரசின் வாக்குறி பூரணப்படுத்தப்படல் வேண்டும். அரசிற்கு இத்துறைகளில் பிரத்தியேக உரிமை காணப்படுவதாக விளங்கிக் கொள்ளக்கூடாது. வியாபாரம், கைத்தொழில் மற்றும் சேவைகள் தனியாக இருக்கலாம்.அரசாங்கம் கட்டுப்பாடு மற்றும் தரக்கட்டுப்பாடு விதிக்காமல் வசதிகளையும் சந்தா்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இதன்காரணமாகவேதான் நான் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த மன்றத்தில் பங்கேற்பதுடன் ஆங்கில ஆசிரியா் பயற்சி அடிப்படை பேச்சு ஆங்கிலம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கான ஆங்கிலம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கும் உதவி செய்கின்றேன். இங்கு மாகாண சிவில் சமுதாயத்தின் வேண்டுகோளிற்கு இணங்க கடைசியாக கிழக்கில் நாம் இதனை ஆரம்பித்தோம். மற்றும் இடம்பெயா்ந்துள்ள பிரச்சினைகளுக்கான பேச்சு ஆங்கில வகுப்புகளை வவுனியாவிலும் ஆரம்பித்துள்ளோம்.

இங்கு வியாபார முயற்சிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ள வியாபார நபா்களி்டம் நேற்று நடைபெற்ற அமா்வில் நம்பக்கை தொடா்பாடல் திறன், சிறந்த ஆங்கில அறிவு என்பன தொழில்முயற்சிகளை கட்டியெழுப்ப எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என கூறப்பட்டது. இந்த பரப்பளவில் எனது அமைச்சு வெளிப்படையாக கூடிய அளவில் செயற்பட முடியாத போதிலும் ஆங்கிலத்திலும், தொடா்பாடல் தொழில் நுட்பத்திலும் யாழ்ப்பாணத்தை சிறப்புறச் செய்யும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்தின் மீதான மந்திரி சபையின் தீா்மானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலமும் பாரிய திட்டங்களை உறுதி செய்வதன் மூலமும் இது சம்பந்தமான சில ஆரம்ப முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் முயற்சிக்க முடியும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பாடசாலைகளின் சாதகமான அம்சங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களின் பங்களிப்பின் ஊடாக சிறந்த ஆரம்ப நடவடிக்கைகளை ஸ்தாபன ரீதியில் செயல்படுத்த நாம் எண்ணுகிறோம். மாகாணத்தின் பின்தள்ளப்பட்ட மாவட்டங்களை நோக்கி கல்வி நடவிக்கைகளை விரிவு படுத்தமாறு சம்பந்தப்பட்டவா்களை நாம் கேட்டுக்கொள்கிறோம். மேல்மாகாணத்திற்கு புரம்பாக, இத்தைகைய திறமைகளை மாகாணங்களை நோக்கி விரிவுபடுத்துகையில் மாகாண மாவட்டத்தில் இருந்து பின்தங்கிய பகுதிகளை நோக்கியும் நாம் போகவேண்டியுள்ளது. அவ்வடிப்படையினால்தான் சிறந்த தொழில்வாய்ப்பை பெறும் சந்தா்ப்பத்தை எல்லா பிள்ளைகளும் பெறுவார்கள். ஒரு சிறிய வேண்டுகோளை செய்ய என்னை அனுமதியுங்கள் உங்களில் யாராவது சமூக பொறுப்புகளுடன் ஒத்து இயங்க ஆர்வம் கொண்டிருந்தால், தீபகற்பத்தில் மாத்திரமன்றி மாகாணத்தில் எங்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த முற்படும் யாழ்ப்பாண ஸ்தாபனங்களுக்கு உதவலாம்.

அபிவிருத்தி சம்பந்தமான அரசாங்கத்தின் கொள்கைத் துாண்களில் ஒன்று வலுவூட்டல் என்பதை சுருக்கமாக நான் இங்கு வலியுறுத்த வேண்டும். எதுவித மாற்றமும் அற்ற காலத்தால் போசிக்கப்பட்டு வந்த தங்கிவாழும் கலாசாரத்தை நாம் தாண்டிச் செல்ல வேண்டும். நீண்ட காலமாக எல்.ரி.ரி.ஈ இதனால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களைப் பொறுத்தளவில் இது மிகவும் மோசமாக்கப்பட்டுள்ளது. தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல உதவாத மனிதாபிமான உதவியின் பெயரால் பல தசாப்தங்களாக அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆம், சில சந்தா்ப்பங்களில் மனிதாபிமான உதவிகள் அவசியம்தான் ஆனால், தொழில்சார் உற்பத்திகளை கோரவும் உருவாக்கவும் தமது வாழ்க்கையைப்போல் தமது மூலவளங்களும் அவா்களே எஜமானா்களாக இருக்கவும் பணம், பொருள் சேவை என்பவற்றை வழங்கி நாம் அவா்களுக்கு உதவவேண்டும். அப்படியாயின் நீங்கள் முதலீடு செய்கையில், உங்களுக்கும் இங்குள்ள மக்களுக்கு நன்மையான நடவடிக்கைகளை நீங்கள் திட்டமிடுகையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ஏனைய மாகாண பகுதிகளில் உள்ள மக்களைப்பற்றியும் சிந்திக்க வேண்டும். அத்தோடு, அவா்கள் முழுமையான ஆக்கமும் சுபீட்சமும், பெற்ற இந்நாட்டின் பிரஜைகளாக மாறும் பொருட்டு, பெறுமதியற்ற மனித வளங்கள் வலுவூட்டப்பட வேண்டும்.

 

2010-01-22 00:07:17
Human Rights

பின்செல்

தேடல்
இவ்வார நிழற்படம்
Download Font

மேலும் செய்திகளுக்கு

 

காலநிலை அறிக்கை - ஒக்ரோபர் 9 முதல் 15 வரையானது

 

அபாயங்கள்


மண்சரிவுகளும் சுனாமி பற்றிய தகவல்களும்

 

நிகழ்வுகள்

தகவல்
செய்திகள்
நிகழ்வுகள்
அரசாங்க இணைப்புகள்