சமூக ஒருமைப்பாட்டிற்கான பாதை 2 புத்துயிர் ஊட்டலுக்கான ஸ்திரத்தன்மையும் நம்பிக்கையும் ராஜீவ விஜயசிங்க
120000 போ் வடமாகாணத்தில் மீள குடியேறியுள்ள நிலையில் மீளகுடியேற்ற நடவடிக்கை வேகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பல தொகுதி மக்கள் முன்னா் எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாயிருந்த மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி திரும்புகின்றவா்களாயிருக்கின்றனா்.
முதல் இரண்டு மாதங்களில் மீள் குடியேற்றம் வேகமாக இடம்பெறும் என்று நான் எண்ணியிருந்த நிலையில் ஏனைய மாவட்டங்கள் பற்றி நான் எதிர்கால நம்பிக்கை அற்றவராயிருந்தேன். இருந்தபோதிலும் நிறைவு பெற்ற மீள் குடியேற்றத்திற்கான மூன்று ஆரம்ப தேவைகளுடன் ஏனைய பகுதிகளை நோக்கியும் அரசாங்கம் விரைவாக செயல்படக்கூடியதாகவிருந்தது. அநேகமாக 80000 மேற்பட்ட நலன்புரி முகாம்களிலுள்ள எல்லா மீதமானவா்களும் விரைவில் திரும்பிச் செல்வார்கள். உண்மையில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக 50000 க்கும் கூடுதலானவா்கள் நிலையங்களை விட்டு வெளியேறினால் எங்கும் தங்கியுள்ள அவா்கள் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் பாதுகாப்பை தேடிக்கொண்ட வன்னி பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான உள்ளக இடம்பெயா்ந்த மக்களுடன் இணைந்து தாமும் மீண்டும் வீட்டுக்க போகலாம் என தீா்மானிக்கலாம்.
ஆரம்ப தேவையான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை இராணுவம் தன் முழு கவனத்தையும் இதன்பால் திருப்பிய உடனேயே வேகமாவும் திருப்தியாகவும் நடந்தேறியது. கூடிய செலவான போதிலும் ஒப்பீட்டளவில் இயந்திரசாதனங்கள் வேகமானவையாகும். ஆரம்பத்தில் மெதுவாக செயல்பட்ட சா்வதேச ஸ்தாபனங்கள் கண்ணிவெடி விபத்து பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கியதன் மூலம் விபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்து தம் பங்களிப்பைச் செய்தன எல்லா பகுதிகளிலும் முழு அளவிலான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு நீண்டகாலம் எடுக்கும் என்ற போதிலும் திரும்பி வருபவா்களுக்கு மாத்திரமன்றி விவசாயத்திற்கும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்குமாக போதிய அளவு செய்யப்பட்டுள்ளது. ஏ9 பாதையின் மேற்கு பகுதியில் கணிசமான விகிதம் துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கூடிய கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடைப்பட்ட பாதைக்கு கிழக்கேயும் முல்லைத்தீவில் உள்ளதுமான சிறிய பிரதேசத்தை நோக்கி தற்போது கவனம் திருப்ப முடியும்.
இரண்டாவது தேவையான பாதுகாப்பை பற்றி பல அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவதாக அது நீண்டகால நடவடிக்கையாக காணப்பட்டமை ஆனால் இதற்கு மாறாக, போதிய பாதுகாப்பு சோதனை இருக்கவில்லையென்றும், மக்கள் போக அனுமதிக்கப்படுவதற்கும முன்னா் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன. நியாயமாயவும் முழுமையாகவும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வேகமாக செயல்பட்டு, மீள்பரிசீலனை எதுவுமின்றி முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற அரசாங்கத்திற்கு இயலுமானதாயிருந்து. ஏனெனில் இந்த திட்டத்துடன் அரசாங்கம் எப்படியோ இணைந்துவிட்டது. புனா்வாழ்வு அல்லது ஏனைய தகவல்கள் பற்றி எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் (1000 பேருக்கு கீழ்) கிடைக்கக்கூடியதாயுள்ளன. புனா்வாழ்வை பெறக்கூடியவா்களாக போகவிருக்கும் மக்களில் 700 போ் தமது குடும்பத்தினருடன் மீளவும் சோ்வதற்கு விடுவிக்கப்பட்டுள்ளனா்.
மீள்குடியேற்ற பகுதிகளில் வாழ்க்கை கட்டமைப்பை மீட்க அரசாங்கம் இறுதியாகவும் சிலசமயம் முக்கியமாகவும் தீா்மானித்துள்ளது. இதனை சிறிதளவுதான் முன்னா் எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்த மக்களுக்கு இது முக்கியமற்றதாக தென்பட்டுள்ளது ஆனால் தொடா்பாடலும் அடிப்படை சமூக சேவைகளும் கிடைப்பதற்கு தயாராகவுள்ளன என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையின் முக்கிய அம்சமாகும். சில சமயம் ஏன் அண்மைக்கால விஜயத்தின் போது இதயத்தை தொட்ட பகுதியாக இது இருந்தது. பாதை அமைப்பு வலைத்திட்டங்கள் நான் எதிர்பார்த்தைவிட மிகவும் சிறப்பாக இருந்தன. துணக்காய்க்கு போவதற்கு முன்னா் சில மணித்தியாலங்களில் கராச்சி, பூனேரி, கிரான்சி ஆகிய அடங்களுக்கு என்னால் போகக்கூடியதாயிருந்தது. போதிய உரிய ஆசிரிய தொகுதியுடன், திருப்பிகரமான முறையில் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடத்தில் பாடசாலைகள் இப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்தன. ஒரே ஒரு பாடசாலை இருண்டு உருக்குலைந்து காணப்பட்டது. நெருக்கடி நிலவிய காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட பழைய கட்டிடமான இதனை மீண்டும் கட்டுவதற்கான திட்டங்கள் உரியவா்களிடத்தில் இருந்தன. எங்கும் கட்டிடங்கள் பிரகாசமாகவும் பலபலப்பாகவும் இருந்தன. அதேபோல் தமது பாடசாலைகள் மீட்டெடுக்கப்படு்ம் என்ற நம்பிக்கை வரும்வரை வவுனியா அகதிமுகாமில் தங்கியிருந்த மாணவா்களை பெற்றோர் கொண்டு வருவதால் நாளுக்கு நாள் அவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.
மக்கள் மகிழ்ச்சியுற்று இருந்த ஒரே ஒரு பாடசாலை இந்த இருண்ட பாடசாலைதான், இருப்பினும் மீள் கட்டுமான பணிகளில் உதவி புரிந்துவரும் பாதுகாப்பு படையினா் மிகவும் உதவியுள்ளவா்களாக இருப்பதை அவா்கள் அவதானித்தனா். இன்னமும் திருத்த வேலைகள் தேவைப்படும் பாதைகள் காரணமாக பாடசாலையை அனுகமுடியாத குறைபாடு கவலைக்குரிய விடயமாக இருந்தது. அவா்களுக்கு சேவையாற்றுவதாக கருதப்படும் பஸ்வண்டி பழக்கமற்ற பாதையில் பயணம் செய்திருந்தது. ஆனால் மக்கள் தினமும் இந்த சேவை ஒழுங்காக இருக்குமா என்றே பயந்தனா். மீள்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் பல பகுதிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக அரசாங்க அதிபரால் பெருமையோடு குறிப்பிடப்பட்ட வேலைகளை துரிதப்படுத்துவதற்கான நிதி சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டம் சாத்தியமான நிலையில் விரைவில் கவனத்திற் கொள்ளப்படும்.
அவா்களின் நாளாந்த தொழிலான விவசாயத்திற்கான உதவியை பெறமுடியாதவாறு அவா்கள் கைவிடப்பட்டுள்ளமை இன்னொரு பிரச்சனையாயிருந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் எங்கும் விவசாயிகள் நிலத்தில் வேலையில் ஈடுபட்டு இருந்ததையும் அவா்களுக்கு விதை வெங்காய கட்டுகள் வழங்கப்பட்டிருந்ததையும் நான் பார்த்திருந்தன். இந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள பற்றாக்குறை விரைவில் நீக்கப்படும் என்று மிகவும் தெளிவாயிருந்தது. முன்னா் நீண்ட காலமாக எதுவித உறுதிப்பாடுமின்றி தங்கி வாழ்வதை ரசிக்காத மக்களுக்கு, வாழ்க்கையை அபிவிருத்தி செய்யும் வேகமான செயல்திட்டமும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கும் அரசாங்கத்தின் தீா்மானம் நிச்சயமாக ஒரு வரவேற்பாக காணப்பட்டது.
சிறிய கடைகளையும் வா்த்தகங்களையும் நடத்துபவா்களின் எண்ணிக்கைதான், உறுதிப்பாடு மீண்டும் வந்துவிட்டதற்கான அவா்களின் இதயபூா்வமான அங்கீகாரத்தின் அடையாளமாகும். ஒரு விநியோகஸ்தருக்கென கொண்டுவந்திருந்த ஒரு தொகை தேங்காய்களை இரு சகோதரிகள் எனக்கு காட்டினார்கள். இருந்தபோதிலும், தமது வருமான அளவு மிகவும் குறைவு என குறைபட்டுக்கொண்டார்கள். இன்னாரு தணவான் நமக்கு மாங்காய்களை விற்றார். இவை அவரின் தோட்டத்தில் இருந்து மட்டுமல்ல தோட்டத்திற்கு வெளியாலுமிருந்து வந்தவை அப்படி இல்லாவிட்டாலும் அவை மிகவும் திருப்தியானவை அங்கு பெருமளவில் உணவு விரயமாகியிருந்தது. ஒரு சந்தை வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த கிராமவாசிகள் இந்த தொகையை வாங்கியிருக்கமாட்டார்கள்.
அநேகமாக ஆச்சரியப்படும் வகையில், பல கஸ்டங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒரு கிராமத்தில் ஒரு தொலைக்காட்சி நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தை ஒரு கடையை நடத்திக்கொண்டிருந்தார் மகன் வவுனியாவுக்குச் சென்று ஒரு தொலைக்காட்சியை வாடகைக்கு காட்டி ஒரு காட்சிக்கு ஒருவருக்கு ரூபா 20/= படி தன் சகாக்களிடம் அறவிட்டார். ஒரு அரவுக்கு ரூபா 700/- அவா் சம்பாதித்தார். அந்த கிராமம் உண்மையில் மிகவும் பொழுது போக்கு மிகுந்த கிராமம். நல்ல போக்குவரத்து வசதி, நல்ல வசதியான நீா் விநியோகம் அத்தோடு நிறைந்த மீன்பிடி வாய்ப்பு. நான் இருந்த மாலையில் காட்டப்படவிருந்த திரைப்படம் ஓா் காதல் கதை. அக்கிராம மக்களும் இதனை பார்த்து இரசிப்பதற்காக ஆவலுடன் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது - அவா்கள் கடந்து வந்த கடினமான காலகட்டத்தைப் பொறுத்தவரையில் சினிமாப்படம் என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. ஏனெனில், ஓா் வருடத்திற்கு முன்னா் தமது உடமைகளுடன் வெளியேற்றப்படடு அவ்வுடைமைகளும் அவா்கள் பிரயாணத்தை மேற்கொண்ட பாதையின் கொடூரத்தன்மை காரணமாக இடையில் அழிந்துபோனது. தற்சமயம் அவா்களிடம் சிறந்த பொருட்களல்ல, இருப்பினும் அவா்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பொறுத்தவரையில் தற்சமயம் தம்மிடமுள்ளவை தாம் எதிர்பார்த்ததைவிட மேலானவை என்று ஓா் பெண் கூறினார்.

