சமூக நல்லினக்கத்திற்கான பாதை 3 பொதுமக்கள் இராணுவ உறவு – சமூக அபிவிருத்திக்கான அடிப்படை ரஜீவ விஜேசிங்க
நீண்ட இழுபறியில் காணப்பட்ட மீள்குடியமர்த்துகையை நாம் நோக்கும் போது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பங்கே பிரதானமாக கருதப்படுகின்றது அவர்கள் எல்.ரி.ரிஈ. யினரை தோற்கடிப்பதற்காக பெரும் பிரயத்தனம் செய்தும்‚ அவர்களுக்கான ஓய்வு வழங்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் கடுமையாக சேவை செய்துள்ளனர். இச்சேவையும் அடையாளம் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.
இராணுவ மோதல்களின் பின்னர் அவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் நயவஞ்சகமான எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளதுடன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழு்தங்களும் தோன்றியுள்ளன. உண்மையில் இது ஓர் ஆச்சரியப்படுத்தும் செயலாகும். ஏனெனில்‚ அநேகமான நாடுகளில் இராணுவம் அனர்த்த முகாமைத்துவத்தில் பிரதான ஓர் பாத்திரத்தை வகிக்கின்ற வேளை அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவர்களது வலிமை மேம்படுத்தும் முகமாகவும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இவை இராணுவ சமூக உறவை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இலங்கையில் இராணுவம் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் சமூக ஒருமைப்பாடு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சிறந்த ஓர் பங்கை வகித்துள்ளது. வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளாக கடமை புரிந்த இரண்டு ஜெனரல்களும் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளதுடன் இவர்கள் செய்த கடமையை ஓர் சிவிலியனால் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஜெனரல் சந்திரசிறி அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அடைக்கலம் கோரிய ஒரு இலட்சத்திற்கு மேலான அகதிகளுக்கு தேவையான நிலத்தை தயார் செய்து தேவையான முகாம்களை அமைப்பதற்கு அா்ப்பணிப்புடன் பாடுபட்டதுடன் இதே தொகையான அகதிகளுக்கு தேவையான வசதிகளை மே மாதத்திலும் செய்தார்.
நான் ஓரு நாள் அங்கு நேரில் சென்றிருந்தேன்‚ அப்போது ஜெனரல் சந்திரசிறி அவா்கள் கடினமான ஓா் வேலைநாளின் பின்பும்‚ சூரியன் மறையும் வேளையிலும் நடைபெறும் வேலைகளை கண்கானிக்கச் சென்றார். அவ்வேளையில் சர்வதேச முகவா்களும் தாங்கள் அவ்விடத்தில் மாலை வேளையில் இருப்பதற்கு கடமைப்பட்டிருக்கவில்லையென்றும் தங்களது இருப்பிடங்களுக்கு சென்றுவிட்டனா்.
அவரின் கடமைகளை பின்னர் ஏற்றுக்கொண்டவரும்‚ தனது பாதுகாப்பு தொடர்பான கடமைகள் முடிந்ததுமே விரைந்து அவ்விடத்திற்கு வந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள அவரது அதிகாரிகளும் அலுவலர்களும் அயராது உழைத்து தமது பொறுப்பில் இருந்த மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்தனர். இந்த அதிகாரிகள் வவுனியாவில் பாதுகாப்பு நடைமுறைகள் நடைபெற்றபோதும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக சர்ச்சைகள் எழும்பும் போதெல்லாம் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அந்நடைமுறையினை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர். இன்றுவரை அவர்கள் மேல்வைத்திருந்த நம்பிக்கை நியாயப்படுத்தப் பட்டுள்ளது.
அவர்கள் ஏற்கனவே இணங்கவைக்க முடியாத பயங்கரவாதிகளிடம் கடினமான நிலப்பரப்பில் யுத்தத்தில் ஈடபட்டு தமது கடமையில் பெரும் பகுதியை பூரணப்படுத்தியிருந்ததால் சமாதானத்தை நிலைநாட்டும் யுத்தத்தின் சிறுபகுதியை கோட்டைவிடக்கூடாதென்று முடிவு செய்திருந்தனர். இந்த வகையில் மக்களின் மனதையும் அன்பையும் பெற்றுக் கொள்ளும் முகமாக அவர்களால் செய்யப்படும் தியாகம் பாராட்டத்தக்கதாகும். தற்சமயம் வன்னியில் இராணுவத்தினர் புதிதாக வந்துள்ளவா்களுக்கான வீடுகளை கட்டுவதில் உதவி செய்வதுடன் சிலவேளைகளில் பெண்களின் மற்றும் சிறுவர்களின் உதவிகளைப் பெற்று தானாகவே வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றனர்.
அவர்கள் பாடசாலைகளை தயார் செய்தும்‚ சில பிரதேசங்களில் பிரயாண வசதிகள் செய்து கொடுத்தும்‚ சிறுவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை பரிசாக வழங்கியும் உதவி புரிந்துள்ளனர். இராணுவத்தினர் மக்களின் வேறு அத்தியாவசிய விடயங்களான சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் வழிபாட்டுத் தளத்தை சுத்தம் செய்தல் மற்றும் தை மாதத்தில் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கான ஆயத்தங்களை செய்தல் தொடர்பாகவும் தமது கரிசணையை காட்டியுள்ளனர்.
அவர்கள் தமது சகல உதவிகளையும் செய்ததுடன்‚ கண்கானிப்பு நடவடிக்கைகளும் சிலவேளைகளில் அடர்ந்த காட்டில் இருந்தவன்னம் ஈடுபட்டனர். தற்சமயம் பெரும் ஆபத்து இல்லாமல் இருப்பினும்‚ தேடுதல் நடவடிக்கைகளின் போது கிடைத்கும் ஆயுதங்கள் தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டிய அவசியத்தை தோற்றுவித்துள்ளது. சர்வதேச முகவர்களினால் மிகவும் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடிகற்றும் நடவடிக்கைக்கும் புத்தியிர் அளித்து அதனையும் கவனித்து வருகின்றனர்.
அதேவேளை‚ அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான நிலையங்களுக்கும் பொறுப்பாக இருக்கின்றனர். இங்கு அவர்களின் கடமையுணர்ச்சியும்‚ கரிசணையினையும் காணக்கூடியதாகவுள்ளது. நான் கனடாவில் குடியுரிமை பெற்ற ஒரு நபரை யூலை மாதத்தில் சந்தித்தபோது அவர் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கூறிய விடயம் ஞாபகத்திற்கு வருகின்றது. அவர் தனது உறவினர்களை பார்ப்பதற்காக வந்த சமயம் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டதாக கூறினார். அவர் தனது முகாமிற்கு பொறுப்பாக இருந்த கேணலுடன் முன்னைய வருடம் தான் சம்பாதிக்கத் தவறிய ஓர் முக்கிய விடயத்தை கதைத்ததாகவும் கூறினார்.
பெரும் எண்ணிக்கையான இளம் யுவதிகள் தாய்மையடைந்து இருந்தமையாலும் அவர்கள் முகாமிற்கு வந்தபின்னர் குழந்தைகளை பெற்றெடுத்ததாலும் அம்முகாமிற்கு பொறுப்பாக இருந்த இளம் பெண்கள் அவா்களுக்கு தாய்மார்களாகவும் பணியாற்ற வேண்டிய கட்டாயமேற்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உதவியுடன் இயங்கும் நம்பிக்கை கட்டியெழுப்புவதும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துவதுமான கருத்திட்டங்களானது மாகாண மட்டத்தில் ஒழுங்கான கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இதன்மூலமாக பிரச்சினைகளை தீர்த்தும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அவசியமான நம்பிக்கையையும் வளர்த்து வருகின்றது. இக்கருத்திட்டம் சிறிய நிதியுதவியுடன் இயங்கியபோதும் அவ்வாறான நிதியை பலவழிகளிலும் பயன்படுத்தி பலமாகாணங்களில் வாழும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுகின்றது.
சில பிரதேசங்களில் இத்திட்டம் குடிநீர் விநியோக திட்டங்களை முன்னெடுத்து மூவின மக்களையும் சேர்த்து வாழ்வதற்கான வழிவகையினை செய்கின்றது. ஒரு மாகாணம் பாடசாலைகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு சகல சமுதாயங்களையும் சோ்ந்த பாடசாலை மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தலைநகர் கொழும்புக்கு விஜயங்களை மேற்கொள்கின்றது. இதன் மூலம் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொழிப்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. வேறு பிரதேசங்களில் பெண்களுக்கான பயிற்சிகள் வழங்கி பனமர உற்பத்திகள் மூலமாக வருமானத்தை தேடிக்கொள்வதற்கு உதவி வருகின்றன.
இம்முயற்சிகள் பெரும் பரப்பளவைக் கொண்டிராவிட்டாலும் அவை தொழில் உறவுகளை கட்டியெழுப்புவதற்கான சிறப்பியல்புகளை கொண்டுள்ளதுடன்‚ அவை ஆலோசனைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அநேகமான பகுதிகளில் இராணுவத்தினர் முக்கிய பங்கை வகிக்கின்றதுடன் அவர்களின் இப்பிரதேசம் தொடர்பான அனுபவம் கருத்திட்டங்களை முன்னெடுப்பதில் பெரும் உதவியாகவுள்ளது. அவர்களினால் செய்யப்படும் செயற்பாடுகளில் ஓர் சிறு பகுதியைத்தான் நாம் காணக்கூடியதாகவுள்ளதுடன் பெரும் பகுதியானது அடையாளம் காணப்படாமல் செல்கின்றன.
அதிஸ்டவசமாக‚ கருத்திட்டங்களில் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் போது இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி விடயங்களிலும் சுயகெளரவம் தொடர்பான விடயங்களிலும் சிறப்பான கரிசணை காட்டப்பட்டுள்ளதை என்னால் காணக்கூடியதாக இருந்தது.
இந்த அதிகாரிகள் இதே கரிசணையுடன் தொடர்ந்தும் இம்மக்களுக்கு பூரணமான சிவில் நிர்வாகம் ஏற்பட்ட பின்பும் தமது சேவைகள் செய்வர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

